400 கோடியை நெருங்கும் ஆதிபுருஷ்.. வியப்பில் திரையுலகம் !

adipurush

 ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் 400 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல்வேறு சர்ச்சைக்களுக்கு இடையே திரையிடப்பட்டு வரும் திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. இந்த படத்தில் ராமராக பிரபாஸ், சீதாவாக கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலிகானும் நடித்துள்ளனர். இராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. 

adipurush

முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என இந்தியாவின் 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. உலக அளவில் நிறைய திரையரங்குகளில் வெளியான இப்படம் எதிர்மறை கருத்துக்களையே பெற்று வருகிறது. இதற்கு காரணம் கிராபிக்ஸ் காட்சிகள் படுமோசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

adipurush

ஆனாலும் இந்த படத்தின் வசூல் மட்டும் குறையவில்லை. முதல் நாளில் 140 கோடியும், இரண்டாவது நாளில் 240 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் இப்படத்தின் வசூல் 400 கோடியை நெருங்கியுள்ளது. தற்போது இந்த படத்தின் மூன்றாவது நாள் வசூல் நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 340 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

Share this story