ஆதிபுருஷ் படத்தில் சர்ச்சைக்குரிய வசனம்... நேபாளத்தில் வலுக்கும் எதிர்ப்பு !

adipurush

'ஆதிபுரூஷ்' படத்தில் சர்ச்சைக்குரிய வசனம் இடம் பெற்றுள்ளதால் அப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. உச்சபட்ச கிராபிக்ஸ் காட்சிகளுடன் 3 டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஓம் ராவத் இயக்கியுள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக தயாராகி வெளியாகியுள்ளது. 

 adipurush

புதிய யுக ராமரை பார்க்கும் வகையில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சனோன் சீதாவாகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும் நடித்துள்ளனர். இராமாயணத்தின் ஒரு பகுதியை வைத்து இப்படம் உருவாகியுள்ளது. 

adipurush

கடந்த ஜூன் 16-ஆம் தேதி வெளியான இப்படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது. அதேநேரம் மூன்று நாட்களில் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. இந்த படம் இந்தியாவை தவிர நேபாளம் உள்ளிட்ட வெளிநாடுகளில் வெளியாகியுள்ளது.‌ இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு வசனம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அந்த வசனம் என்னவென்றால் ஜானகி(சீதை) இந்தியாவின் மகள் என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. 

இந்த வசனத்தை நீக்க கோரி நேபாளத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனால் அங்கு ஆதிபுருஷ் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இனி வெளியாகியுள்ள இந்தி படங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் ஜானகி தெற்கு நேபாளத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை. ஆனால் அதை மாற்றி இந்தியாவின் மகள் என்று படத்தில் இடம்பெற்றிருப்பதால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story