‘ஆதிபுருஷ்’ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி... மன்னிப்பு கோரியது படக்குழு !

adipurush

 ‘ஆதிபுருஷ்’ படத்தின் சர்ச்சைக்கு படக்குழுவினர் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். 

மிகப்பெரிய எதிர்பார்புகளுக்கிடையே வெளியானது ‘ஆதிபுருஷ்’ திரைப்படம். ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்று வருகிறது. இதற்கு காரணம் படத்தில் இடம்பெற்ற கிராபிக்ஸ் காட்சிகள் எதுவும் சரியில்லை. அதேபோல ஸ்க்ரீன் பிளே சரியில்லை. படம் பொம்மை படம் போல இருக்கிறது என்று சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. 

adipurush

ஆனால் விமர்சனங்கள் எதிர்மறையாக வந்தப்போதிலும் வசூலில் ஆதிபுருஷ் சாதனை படைத்து வருகிறது. இதுவரை உலக முழுவதும் 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கிடையே இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வசனம் சர்ச்சையாக வெடித்துள்ளது. 

அது என்னவென்றால் ஜானகி (சீதா) இந்தியாவின் மகள் என்று குறிப்பிடத்தக்கது. ஆனால் ராமாயணத்தின் கதைப்படி தெற்கு நேபாளத்தின் உள்ள கிராமத்தில் பிறந்தவர் தான் ஜானகி என்பது அங்குள்ளவர்கள் நம்பிக்கை. அதை மாற்றி படத்தில் காட்டப்பட்டிருப்பது நேபாளத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது. அங்கு தலைவர்கள் ‘ஆதிபுருஷ்’ படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனால் அரசு படத்திற்கு தடை விதித்துள்ளது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர், பிரச்சனை சுமூகமாக்க காத்மாண்டு மேயரிடம் மன்னிப்பு கோரியுள்ளனர். இது அங்கு பிரச்சனையின் விரீயத்தை குறைந்துள்ளதாக தெரிகிறது. சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த விவாகாரத்திற்கு படக்குழுவினர் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். 

Share this story