ஒவ்வொரு தியேட்டரிலும் ஒரு இருக்கை.. ஹனுமனுக்காக ‘ஆதிபுருஷ்’ படக்குழுவினரின் முடிவு !

adipurush

ஒவ்வொரு திரையரங்கிலும் ஹனுமனுக்காக ஒரு இருக்கை ஒதுக்கப்படும் என ‘ஆதிபுருஷ்’ படக்குழு தெரிவித்துள்ளது. 

நவீன யுக ராமர் கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக தயாராகி வருகிறது.

adipurush

இந்த படத்தில் பிரபாஸ் ராமராகவும், கீர்த்தி சனோன் சீதாவாகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும் நடித்துள்ளனர். கடந்த ஆண்டே வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்த படம் சில காரணங்களால் தள்ளிப்போன நிலையில் வரும் ஜூன் 16-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

adipurush

உச்சபட்ச கிராபிக்ஸ் காட்சிகளுடன் 3 டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்த படம் இந்தியாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆதிபுருஷ் திரைப்படம் வெளியாகும் போது ஒவ்வொரு திரையரங்கிலும் ஒரு இருக்கை கடவுள் அஞ்சநேயருக்காக காலியாக விடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளார். 

 

Share this story