‘‘ராமரை போன்று எளிமையான மனிதர்” - பிரபாஸை புகழ்ந்த பாலிவுட் நடிகை !

adipurush

ராமரைப் போல் எளிமையான மனிதர் பிரபா​ஸ் என்று நடிகை கீர்த்தி சனோன் தெரிவித்துள்ளார். 

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்'. இந்த படத்தில் நடிகை கீர்த்தி சனோன், சைஃப் அலிகான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூன் 16-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

adipurush

இதற்கான நிகழ்ச்சி ஐதராபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் பிரபாஸ், கீர்த்தி சனோன், இயக்குனர் ஓம் ராவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பின் பேசிய நடிகை கீர்த்தி சனோன், ஆதிபுருஷ் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கு நன்றி. மிகுந்த அன்புடனும், மரியாதையுடனும் இப்படத்தில் நடித்துள்ளேன். படம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன் என்று கூறினார். 

adipurush

மேலும் பேசிய அவர், கடவுள் ராமரைப்போல எளிமையான மனிதர் நடிகர் பிரபாஸ். மனதில் தோன்றியதை நேரடியாக பேசக்கூடியவர். படத்தில் ஜானகியாக நடிக்க என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. வாழ்நாளில் சில நடிகர்களுக்கு மட்டுமே இப்படியான கதாபாத்திரங்கள் அமையும். நான் ஆசீர்வதிக்கப்பட்டதாகவே உணர்கிறேன். நான் மிகவும் நம்பிக்கையுடனும், நேர்மையுடனும், மரியாதையுடனும் நடிக்க முயற்சித்தேன்.  எனக்கு படத்தின் முழு நம்பிக்கை இருந்தது.  நான் கதையை புரிந்துக்கொண்டு நடித்தபோது நம்பிக்கை எனக்குள் அதிகம் வந்தது என்று கூறினார்.

 

 

Share this story