மகேஷ் பாபுவுக்கு பிறகு அல்லு அர்ஜூனுக்கு கிடைத்த கௌரவம்... துபாய் அருங்காட்சியகத்தில் அல்லு அர்ஜூன் சிலை...

மகேஷ் பாபுவுக்கு பிறகு அல்லு அர்ஜூனுக்கு கிடைத்த கௌரவம்... துபாய் அருங்காட்சியகத்தில் அல்லு அர்ஜூன் சிலை...

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். தென்னிந்திய அளவில் பிரபலமாக இருக்கும் அல்லு அர்ஜுனின் ஒரு சில திரைப்படங்கள் இந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டதால், பாலிவுட்டுக்கும் அவரது பிரபலமான முகமாக மாறியிருக்கிறார். அவரது நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் பெரும் வெற்றி அடைந்தது. அதோடு மட்டுமன்றி, புஷ்பா கதாபாத்திரத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டுள்ளது.  தேசிய விருதை  பெற்ற முதல் தெலுங்கு நடிகர் என்கிற பெருமையும் அல்லு அர்ஜுனுக்கு சேர்ந்து கொண்டது.

மகேஷ் பாபுவுக்கு பிறகு அல்லு அர்ஜூனுக்கு கிடைத்த கௌரவம்... துபாய் அருங்காட்சியகத்தில் அல்லு அர்ஜூன் சிலை...

இந்த நிலையில் அல்லு அர்ஜூனை கவுரவிக்கும் விதமாக, அவரது மெழுகுசிலை துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விரைவில் இடம்பெறப் போகிறது. இந்த சிலையை செய்ய தேவைப்படும் அல்லு அர்ஜுனின் 200 விதமான புகைப்படங்கள் மற்றும் அளவுகள் ஆகியவை அண்மையில் எடுக்கப்பட்டன. 

இது தொடர்பாக பேசிய அல்லு அர்ஜூன், "நான் சிறுவயதாக இருக்கும்போது இந்த மியூசியத்திற்கு வந்துள்ளேன். ஆனால் நானே இங்கே சிலையாக இடம் பெறப்போகிறேன் என நினைத்துக்கூட பார்த்தது இல்லை" என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இதற்கு முன்பு தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு மற்றும் பிரபாஸின் மெழுகுச் சிலை அந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Share this story