மீண்டும் கைக்கோர்க்கும் மாஸ் கூட்டணி – ட்ரீட் கன்ஃபாம்.

photo

தமிழ்சினிமாவில் தனுஷ்-செல்வராகவன், தனுஷ்-வெற்றிமாறன், விக்ரம்-பாலா, அரவிந்த் சாமி-மணிரத்தினம் என சூப்பர் ஹிட் காம்போக்கள் பல உண்டு. அதேப்போல மலையாள சினிமாவில் வெற்றி கூட்டணிகளுள் முக்கியமான ஒன்று மோகன்லால்- ஜித்து ஜோசப் கூட்டணி. இந்த கூட்டணி தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளதாக அறிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அசத்தியுள்ளனர்.

photo

மோகன்லால்- ஜித்துஜோசப் கூட்டணியில்  முதலாவதாக ‘திரிஷ்யம்’ படம் வெளியானது, பிளாக்பஸ்டர் ஹிட்டான இந்த படத்தின் இரண்டாவது பாகமும் வெளியாகி அதிரிபுதிரி ஹிட்டானது. அடுத்து ‘டுவல்த் மேன்’ படம் வெளியானது, தொடர்ந்து ‘ராம்’ என்ற படம் தொடங்கப்பட்டு சில பல காரணங்களால் பாதியில் தடைப்பட்டது. தற்போது இந்த வரிசையில் ‘நெரு’ என்ற தலைப்பில் படம் உருவாக உள்ளது. நீதி தேவதை கைய்யில் தரசுடன் நிற்கும் இந்த போஸ்டரில் ‘நீதியை தேடி’ என்ற டேக்லைன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் தரமான சம்பவம் இருக்கு என உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Share this story