தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய் பச்சன்

தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய் பச்சன்

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் 157-வது திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் 157வது படத்தை பீம்பிஷரா பட இயக்குனர் மல்லிடி வசிஷ்டா இயக்குகிறார். இப்படத்தைத் யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் அறிவித்து, படப்பிடிப்புக்கான முதல் கட்ட பணிகளை நிறைவு செய்துள்ளனர். வரும் நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது

தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய் பச்சன்

இந்நிலையில், இத்திரைப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அவருடன், அனுஷ்கா ஷெட்டி, மிருணாள் தாகூரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this story