திரையுலகில் 20 ஆண்டுகள் நிறைவு.. நெகிழ்ச்சி பதிவை வெளியிட்ட அல்லு அர்ஜூன் !

தனது 20 ஆண்டுகள் திரைப் பயணத்தையொட்டி நெகிழ்ச்சி பதிவு ஒன்றை நடிகர் அல்லு அர்ஜூன் பதிவிட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் மாஸ் ஹீரோவாக மாறியிருக்கிறார் அல்லு அர்ஜூன். கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியான ‘கங்கோத்ரி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பிறகு ஆர்யா, பன்னி, ஹேப்பி, தேசமுடுரு, பருகு, ஆர்யா 2, வருடு, வேதம், பத்ரிநாத், ஜுலாயி, இட்டரம்மயில்லதோ, எவடு, ரேஸ் குர்ராம், துவாடா ஜெகன்நாதம், நானு பேரு சூர்யா. நா இல்ல இந்தியா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
பின்னர் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான ‘அல வைகுந்தபுரம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து முன்னணி இயக்குனர் சுகுமாருடன் கூட்டணி அமைத்து ‘புஷ்பா’ படத்தில் நடித்தார். இந்திய சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த படம் அல்லு அர்ஜூனை பான் இந்தியா நாயகனமாக மாற்றியது. தற்போது தென்னிந்தியாவில் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர் பட்டியலில் அல்லு அர்ஜூனும் உள்ளார்.
தற்போது ‘புஷ்பா 2’ படத்தில் நடித்து வருகிறார். முதல் பாகத்தை விட பல மடங்கு பிரம்மாண்டமாக இந்த படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் தனது திரையுலக பயணத்தில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் இன்றுடன் 20 ஆண்டு திரையுலக பயணத்தை நிறைவு செய்துள்ளேன். நான் அன்பால் அசீர்வதிக்கப்பட்டவனாக இருக்கிறேன். திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கு நான் நன்றியுள்ளனாக இருக்கிறேன். நான் ரசிகர்களின் அன்பால் நிறைந்திருக்கிறேன். ரசிகர்கள் மற்றும் நல விரும்பிகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Today, I complete 20 years in the film industry. I am extremely blessed & have been showered with love . I am grateful to all my people from the industry . I am what I am bcoz of the love of the audience, admirers & fans . Gratitude forever 🙏🏽
— Allu Arjun (@alluarjun) March 28, 2023