பணிப்பெண்ணுக்கு உதவிய அல்லு அர்ஜூன்.... பாலோவர்ஸ் அதிகரிக்க வீடியோ...
தென்னிந்திய சினிமாவில் மாஸ் ஹீரோவாக மாறியிருக்கிறார் அல்லு அர்ஜூன். கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியான ‘கங்கோத்ரி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பிறகு ஆர்யா, பன்னி, ஹேப்பி, தேசமுடுரு, பருகு, ஆர்யா 2, வருடு, வேதம், பத்ரிநாத், ஜுலாயி, இட்டரம்மயில்லதோ, எவடு, ரேஸ் குர்ராம், துவாடா ஜெகன்நாதம், நானு பேரு சூர்யா. நா இல்ல இந்தியா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பின்னர் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான ‘அல வைகுந்தபுரம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து முன்னணி இயக்குனர் சுகுமாருடன் கூட்டணி அமைத்து ‘புஷ்பா’ படத்தில் நடித்தார். இந்திய சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த படம் அல்லு அர்ஜூனை பான் இந்தியா நாயகனமாக மாற்றியது. தற்போது தென்னிந்தியாவில் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர் பட்டியலில் அல்லு அர்ஜூனும் உள்ளார். தற்போது ‘புஷ்பா 2’ படத்தில் நடித்து வருகிறார். முதல் பாகத்தை விட பல மடங்கு பிரம்மாண்டமாக இந்த படம் உருவாகி வருகிறது.
— Christopher Kanagaraj (@Chrissuccess) November 30, 2023
இந்நிலையில், தனது வீட்டில் பணிபுரியும் பெண்ணிற்கு உதவி செய்யும் விதமாக வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி, அந்த பெண்ணின் சமூக வலைதள கணக்கில், பாலோவர்களை அதிகரிக்க வீடியோ எடுத்துக் கொடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.