‘புஷ்பா 2’-ல் இணையும் சாய் பல்லவி... அல்லு அர்ஜூன் படத்தின் புதிய அப்டேட்

pushpa 2
அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகும் ‘புஷ்பா 2’ படத்தில் நடிகை சாய் பல்லவி இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அல்லு அர்ஜூன் மற்றும் சுகுமார் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் ‘புஷ்பா’. இந்த படத்தில் அல்லு அர்ஜூனுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

pushpa 2

செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவான இப்படத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் மிரட்டியிருந்தார். இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இரண்டாம் பாகம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடர்ந்த காடுகளில் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதையடுத்து தாய்லாந்து உள்ளிட்ட சில வெளிநாடுகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. 

pushpa 2

அதோடு நடிகர் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளையொட்டி வரும் ஏப்ரல் 8-ஆம் தேதி கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றையும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடிகை சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 

Share this story