‘புஷ்பா’ படத்திற்கு கடும் எதிர்ப்பு… பாதியில் நிறுத்தப்பட்ட ஷூட்டிங்…

‘புஷ்பா’ படத்திற்கு கடும் எதிர்ப்பு… பாதியில் நிறுத்தப்பட்ட ஷூட்டிங்…

‘புஷ்பா’ படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் ஷூட்டிங்கை பாதியில் நிறுத்தியுள்ளனர் படக்குழுவினர்.

‘புஷ்பா’ படத்திற்கு கடும் எதிர்ப்பு… பாதியில் நிறுத்தப்பட்ட ஷூட்டிங்…

நடிகர் அல்லு அர்ஜூன் கடும்‌ உழைப்பில் உருவாகி வருகிறது புஷ்பா. சுகுமார் இயக்கும் இப்படம் சுமார் 100கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது. தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் ஃப்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அல்லு அர்ஜுனுக்கு ஜோடியா ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

‘புஷ்பா’ படத்திற்கு கடும் எதிர்ப்பு… பாதியில் நிறுத்தப்பட்ட ஷூட்டிங்…

இந்த படத்தில் மூன்று வில்லன்கள் நடிப்பதாக கூறப்படும் நிலையில்,அதில் நடிகர் பஹத் பாசில் முக்கிய வில்லனாக நடிக்கிறார். இதேபோன்று கன்னட நடிகர் தனஞ்செயா, தெலுங்கு காமெடி நடிகர் சுனில் ஆகியோரும் நடிக்கின்றனர்.முழுக்கமுழுக்க செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்படுகிறது.

‘புஷ்பா’ படத்திற்கு கடும் எதிர்ப்பு… பாதியில் நிறுத்தப்பட்ட ஷூட்டிங்…

வரும் ஆகஸ்ட் 13ம் தேதி புஷ்பா இந்த திரைப்படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஷூட்டிங்கில் அல்லு அர்ஜூனுக்கு கொரானா தொற்று ஏற்பட்டுள்ளதால் கலந்துக்கொள்ளவில்லை. பஹத் பாசில் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் படமாக்கி வருகின்றனர். இந்நிலையில் கொரானா நேரத்தில் இந்த படத்தின் ஷூட்டிங்கை நடத்துவதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனால் புஷ்பா படத்தின் ஷூட்டிங்கை தற்காலிகமாக படக்குழு நிறுத்தியுள்ளது.

Share this story