சிறந்த நடிகராக அல்லு அர்ஜூன் தேர்வு... தேசிய விருதுகள் அறிவிப்பு !

pushpa 2

‘புஷ்பா’ படத்தில் நடித்த நடிகர் அல்லு அர்ஜூன் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

ஆண்டுதோறும் இந்திய திரைப்பட விருதுகள் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021-ஆம் ஆண்டுக்கான 69வது தேசிய திரைப்பட விருதுகள் குறித்த அறிவிப்பை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் இன்று அறிவித்தார். 

pushpa 2

அதன்படி தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோன்று ‘புஷ்பா’ படத்தில் சிறந்த இசையை கொடுத்த தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டுக்கான இரண்டு விருதுகளை ‘புஷ்பா’ திரைப்படம் கைப்பற்றியுள்ளது. 

கடந்த ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான திரைப்படம் ‘புஷ்பா’. செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவான இப்படத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் மிரட்டியிருந்தார்.  பான் இந்தியா திரைப்படமாக வெளியான இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story