ஹாட்ஸ்டார் நிறுவனத்தை விலைக்கு வாங்கும் அம்பானி

ஹாட்ஸ்டார் நிறுவனத்தை விலைக்கு வாங்கும் அம்பானி 

ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னியின் ஹாட்ஸ்டார் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமாகும். இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் மூலம் கோடிக்கணக்கான சந்தாதாரர்களை இத்தொடர் பெற்று இருந்தது. ஆனால், அடுத்த சில ஆண்டுகளுக்கான ஐபிஎல் ஒளிபரப்பு ஏலத்தை ரிலையன்ஸ் குழுமத்திற்குச் சொந்தமான ஜியோ நிறுவனம் கைப்பற்றியது. அதோடு, வார்னர் ப்ரோஸ் நிறுவனத்திற்கு சொந்தமான படங்களை ஒளிபரப்பும் உரிமத்தையும், டிஸ்னியிடம் இருந்து ஜியோ நிறுவனம் சொந்தமாக்கியது. இந்நிலையில் தான் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட தங்களுக்கு சொந்தமான நிறுவனங்களின் இந்திய செயல்பாட்டை மட்டும், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்றுவிடுவது தொடர்பாக டிஸ்னி குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

தற்போதைய நிலைமையில், 66 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 83 ஆயிரம் கோடி ரூபாய் வரை விலைபேசி, இந்த ஒப்பந்தத்தை முடிக்க ரிலையன்ஸ் நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. 
 

Share this story