நடிகைகளின் பயோபிக்கில் நடிக்க ஆசை - அனன்யா பாண்டே
1707047351498

பிரலப பாலிவுட் நடிகர் சங்கி பாண்டேவின் மகளான அனன்யா பாண்டே, இந்தியில், ஸ்டூடன்ட் ஆப் தி இயர் 2 மற்றும் பதி பத்னி அவுர் வோ’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவருக்கு அடுத்தடுத்த படங்கள் குவிந்து வருகிறது. இந்தியில் பிசியாக நடித்து வந்த இவர், தென்னிந்தியாவிலும் கால்தடம் பதித்துள்ளார். அந்த வகையில் தெலுங்கில் வெளியான ‘லிகர்’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் இந்த படம் போதிய வெற்றியை பெறவில்லை. வசீகரிக்கும் அழகினாலும், தன் திறமையினாலும் குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மனதில் ஏகோமித்த இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில், பழம் பெரும் நடிகைகளின் பயோபிக் திரைப்படங்களில் நடிக்க ஆசை என்று நடிகை அனன்யா பாண்டே தெரிவித்துள்ளார்.