நடிகர் நவ்தீப் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் அதிரடி சோதனை

நடிகர் நவ்தீப் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் அதிரடி சோதனை

பிரபல நடிகர் நவ்தீப் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 

தமிழில் 'அறிந்தும் அறியாமலும்' படத்தில் நடித்து பிரபலமானவர் நவ்தீப். 'நெஞ்சில்', 'ஏகன்', 'சொல்ல சொல்ல இனிக்கும்', 'இது என்ன மாயம்', 'சீறு' உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கிலும் பல்வேறு திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். ஐதராபாத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சில நைஜீரிய இளைஞர்களையும், தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்களையும் போலீசார் அண்மையில் கைது செய்தனர். அப்போது, போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு வைத்து இருந்த நடிகர் நவ்தீப்பை தேடி வருவதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தனர். இது பரபரப்பாக பேசப்பட்டது. 

இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள நவ்தீப் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில், சில ஆவணங்களை போலீசார் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது

Share this story