ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து... சிம்பு பட நடிகைக்கு என்னாச்சு ?

Antony

பிரபல மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன் படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மலையாளத்தில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் கல்யாணி பிரிதர்ஷன்.  பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷனின் மகளான இவர், மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் சிவகார்த்திகேன் நடிப்பில் உருவாகி வெற்றிப்பெற்ற 'ஹீரோ' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

Antony

இதையடுத்து சிம்புவின் 'மாநாடு' படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதுதவிர ‘புத்தம் புது காலை’ என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார். மலையாளத்தில் அரபிக்கடலின்டே சிம்ஹம், ஹிருதயம், ப்ரோ டாடி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ஜோஷி இயக்கத்தில் உருவாகும் ‘ஆண்டனி’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். அதில் ஜோஜு ஜார்ஜ், செம்பன் வினோத், விஜயராகவன் உள்ளிட்ட பல நடித்து வருகின்றனர். 

Antony

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்காக ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக டூப் போடாமல் கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

 

 

null


 

Share this story