சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா ஷெட்டி?

சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா ஷெட்டி?

மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் சிரஞ்சீவி நடித்து கடைசியாக வெளிவந்த ' போலா சங்கர்' திரைப்படம் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து சிரஞ்சீவி நடிக்கும் 157வது படத்தை மல்லிடி வசிஷ்டா இயக்குகிறார்.  யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் கதாநாயகியாக நடிக்க நடிகை அனுஷ்கா ஷெட்டி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேண்டஸி கதை களத்தில் உருவாகும் இதன் படப்பிடிப்பு வருகின்ற நவம்பர் மாதத்திலிருந்து துவங்குகிறது என்கிறார்கள்.இதற்கு முன் சிரஞ்சீவி படங்களில் சிறப்பு வேடங்களில் மட்டுமே நடித்துள்ள அனுஷ்கா முதன்முறையாக சிரஞ்சீவி உடன் முழுநீள படத்தில் நடிக்க போகிறார். 

சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா ஷெட்டி?

முன்னதாக இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க த்ரிஷா மற்றும் சோனாக்ஷி சின்ஹா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால் இப்போது அனுஷ்கா தேர்வாகி உள்ளாராம்.
 

Share this story