அம்மாவாக கல்யாணம் எதுக்கு... கர்ப்பமான போதாதா ?.. அனுஷ்கா படத்தின் கலகலப்பான டிரெய்லர் !

அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை அனுஷ்கா. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் அனுஷ்கா நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘Miss ஷெட்டி Mr.பொலிஷெட்டி’.
இந்த படத்தை பிரபல இயக்குனர் மகேஷ் பாபு இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து நவீன் பொலிஷெட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சமையல் கலைஞராக நடிகை அனுஷ்கா நடித்துள்ளார். காதல் மற்றும் காமெடியுடன் உருவாகும் இந்த படம் உணவை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
யு வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்திற்கு ரதன் இசையமைத்துள்ளார். தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இப்படம் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.