விரைவில் உருவாகும் அனுஷ்காவின் பாகமதி 2?
1699540243455

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா ஷெட்டி. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் அவர் நடித்துள்ளார். விஜய், ரஜினி, சூர்யா, கார்த்தி என முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் இணைந்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
2017-ம் ஆண்டு அனுஷ்கா நடிப்பில் வெளியான திரைப்படம் பாகுபலி 2 மற்றும் பாகமதி. இதைத்தொடர்ந்து, அனுஷ்கா நடிக்க உள்ள படம் அவரது 50-வது திரைப்படம் ஆகும். பாகமதி இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.