தெலுங்கு நடிகர் படத்தில் இணைந்த ஆர்யா.. 'சைந்தவ்' லுக் போஸ்டர் வெளியீடு !

saidhav

'சைந்தவ்' படத்தில் ஆர்யாவின் கேரக்டர் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் வெங்கடேஷ், தனது முதல் பான் இந்தியா படத்தில் நடித்துள்ளார். வெங்கடேஷின் 75வது படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு ‘சைந்தவ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சைலேஷ் கொலனு இயக்கி வருகிறார்.  

இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு எஸ்.மணிகண்டன் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். மாஸ் ஆக்ஷன் என்டர்டெய்னர் ஜானரில் உருவாகும் இந்த படத்தை நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

தெலுங்கு நடிகர் படத்தில் இணைந்த ஆர்யா.. 'சைந்தவ்' லுக் போஸ்டர் வெளியீடு !

தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் உருவாகும் இந்த படம் வெங்கடேஷின் முதல் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.  இந்நிலையில் நடிகர் ஆர்யா இந்த படத்தில் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளார். மனாஸ் என்ற கேரக்டரில் அவர் நடிக்கும் கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

Share this story