சல்மான் கான் படத்தை இயக்கும் அட்லீ…. அப்போ…….. விஜய் படம்?

salman atlee

பாலிவுட்டில் தற்பொழுது ஷாரூக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கிவரும் அட்லி அடுத்து சல்மான் கானை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

atlee

தமிழில் ராஜா ராணி , தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்த அட்லீ, தற்பொழுது  பாலிவுட்டில் களமிறங்கியுள்ளார்.  பாலிவுட்டின் முதல் படமே ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுபாக நடந்து வரும் நிலையில் படம் அடுத்த ஆண்டு ஜூன் –2 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை தொடர்ந்து விஜயின் ‘தளபதி 68’ படத்தை அட்லீ இயக்கபோவதாக பேச்சு அடிப்பட்டது.

salman

ஆனால் தற்சமயம் வந்துள்ள தகவல் படி அட்லீ ஷாருக்கானை தொடர்ந்து சல்மானை வைத்து புதிய படம் இயக்கவிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. ஜவான் படபிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் சல்மான் கானை சந்தித்து கதையை கூறியதாகவும் அதற்கு சல்மான் சம்மதம் தெரிவித்ததாகவும் சினி வட்டாரம் கிசுகிசுகின்றன.

Share this story