எதிரிகளை துவம்சம் செய்யும் பாலகிருஷ்ணா... வெளியானது 'வீர சிம்ஹா ரெட்டி' டிரெய்லர் !

பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகியுள்ள 'வீர சிம்ஹா ரெட்டி' படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வீர சிம்ஹா ரெட்டி'. இந்த படத்தை கோபிசந்த் மல்லினேனி இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், ஹனிரோஸ், துனியா விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமன் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் சங்கராந்தியையொட்டி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இதில் எதிரிகளை பறக்கவிடும் காட்சிகள் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. மொத்தத்தில் இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதே தேதியில் விஜய்யின் வாரிசு, சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா ஆகிய படங்கள் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.