பாலகிருஷ்ணா உடன் கூட்டணி அமைக்கும் கோபிசந்த்… எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் சூப்பர் ஹிட் காம்போ!

பாலகிருஷ்ணா உடன் கூட்டணி அமைக்கும் கோபிசந்த்… எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் சூப்பர் ஹிட் காம்போ!

நடிகர் பாலகிருஷ்ணா, இயக்குனர் கோபிசந்த் உடன் கூட்டணி அமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதையடுத்து இயக்குனர் கோபிசந்த் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கவிருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மித்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். எஸ். தமன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

பாலகிருஷ்ணா உடன் கூட்டணி அமைக்கும் கோபிசந்த்… எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் சூப்பர் ஹிட் காம்போ!

இப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. கன்னட நடிகரான கோபிசந்த் தற்போது சூப்பர் ஹிட் இயக்குனராகவும் மாறியுள்ளார். அவர் இயக்கத்தில் வெளியான ‘கிராக்’ திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் பாலகிருஷ்ணா உடன் கூட்டணி அமைத்துள்ளதால் அந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இன்று அந்தப் படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது.

“பாலையா பாபு காருவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் … விரைவில் உங்களை படப்பிடிப்புத் தளத்தில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம் சார்.” என்று கோபிசந்த் தெரிவித்துள்ளார்.

Share this story