'பஸ்தார் தி நக்சல் ஸ்டோரி’ மீண்டும் இணைந்த 'கேரளா ஸ்டோரி' டீம்.

photo

இந்து பெண்கள் கட்டாயப்படுத்தி மத மாற்ற செய்யப்பட்டு இஸ்லாமிய பயங்கரவாதிகளிடம் சிக்கிக்கொள்வதாக திரைக்கதை அமைக்கப்பட்ட படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இந்த படம் வெளியான சமயத்தில் கடும் எதிர்ப்பு, சர்ச்சை என பரபரப்பாக இருந்தது. தமிழகத்தில் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டாலும் படம் நாடு முழுவதும் வெளியாகி கிட்டதட்ட ரூ.200 கோடியை வசூலித்தது. இந்த நிலையில் மீண்டும் படத்தின் இயக்குநர் சுதிர்தோ சென் இயக்கத்தில், விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் உண்மை கதையை மைய்யமாக வைத்து ‘பஸ்தார் தி நக்சல் ஸ்டோரி’ என்ற படம் துவங்கியுள்ளது.

photo

இந்த படம் சதீஸ்கர் மாநிலம் நக்சல் அதிகம் உள்ள பஸ்தார் பகுதியை மைய்யமாக வைத்து எடுக்கப்பட உள்ளது. படத்தின் கதாநாயகியாக ‘தி கேரளா ஸ்டோரி’ பட கதநாயகியான ஆதா சர்மா இணைந்துள்ளார். படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


 

Share this story