‘போலா சங்கர்’ படுதோல்வி... சம்பளத்தை திருப்பி கொடுத்த சிரஞ்சீவி !

bhola shankar

‘போலா சங்கர்’ திரைப்படம் படுதோல்வி சந்தித்த நிலையில் தனது சம்பளத்தை நடிகர் சிரஞ்சீவி திருப்பி கொடுத்துள்ளார். 

தெலுங்கின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘போலா சங்கர்’. இந்த படம் தமிழில் அஜித் நடிப்பில் சூப்பர் ஹிட்டடித்த ‘வேதாளம்’ படத்தின் ரீமேக்காகும். இந்த படத்தில் சிரஞ்சீவியின் தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷும், கதாநாயகியாக தமன்னாவும் நடித்துள்ளார்.

bhola shankar

ஏகே எண்டர்டைமண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை மெஹர் ரமேஷ் என்பவர் இயக்கியுள்ளார்.  அண்ணன் - தங்கை சென்டிமென்ட்டில் உருவாகியுள்ள இந்த படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியானது. தமிழில் சூப்பர் ஹிட்டடித்த இந்த திரைப்படம் தெலுங்கில் படுதோல்வியை சந்தித்துள்ளது. 

இதனால் தயாரிப்பாளர் பெருத்த நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் நஷ்டத்தை சரி செய்யும் வகையில் தனது சம்பளத்திலிருந்து 10 கோடியை திருப்பி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்காக சுமார் 60 கோடி சம்பளம் சிரஞ்சீவி வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story