தெலுங்கு பிக்பாஸ் வெற்றியாளர் கைது...

தெலுங்கு பிக்பாஸ் வெற்றியாளர் கைது... 

தெலுங்கில் நடிகர் நாகர்ஜூனா தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது. யு டியூபர் பல்லவி பிரசாந்த் என்பவர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார். நிகழ்ச்சி முடிந்து ஸ்டுடியோவை விட்டு அவர் வஎளியே சென்ற போது, அவருடைய ரசிகர்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ரன்னர் அப் வின்னரின் கார், இதர போட்டியாளர்களின் கார்கள்,  மற்றும் அரசு பேருந்துகளை அடித்து நொறுக்கி கடுமையாக சேதப்படுத்தினர். இந்த விவகாரம் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. 

தெலுங்கு பிக்பாஸ் வெற்றியாளர் கைது... 

பல்லவி பிரசாந்த் மீதும் அவரது ரசிகர்கள் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. நேற்று பல்லவி பிரசாந்த்தையும் அவரது தம்பி மகாவீர்  என்பவரையும் தெலங்கானா சித்திபேட் மாவட்டம் கொல்கூர்  என்ற அவர்களின் சொந்த ஊரில் போலீசார் கைது செய்தனர். 

Share this story