அயோத்தி ராமர் கோவில் விழாவில் நடனமாடும் பாலிவுட் நடிகை

அயோத்தி ராமர் கோவில் விழாவில் நடனமாடும் பாலிவுட் நடிகை

உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா வரும்ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை  செய்து வருகிறது. அன்று நண்பகல் 12.45 மணி அளவில் கோயில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது. பகவான் ஸ்ரீராமர் கோயில் குடமுழுக்கு, பாரதத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் மற்றுமொரு தீபாவளி பண்டிகையாக இருக்கும் என்பதில், சந்தேகமே இல்லை. அன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்றிக் கொண்டாட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதையொட்டி இந்தியாவில் அனைத்து பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அயோத்தி ராமர் கோவில் விழாவில் நடனமாடும் பாலிவுட் நடிகை

இந்நிலையில், கோயில் நிகழ்ச்சியின்போது, பிரபல பாலிவுட் நடிகையும், பிஜேபி எம்பியுமான ஹேமமாலினி நடனமாடி சிறப்பிக்க உள்ளார்.
 

Share this story