பாலிவுட்டின் கிங்கானுக்கு பிறந்தநாள்... திரைப்பிரபலங்கள் வாழ்த்து...

பாலிவுட்டின் கிங்கானுக்கு பிறந்தநாள்... திரைப்பிரபலங்கள் வாழ்த்து...

2023-ம் ஆண்டில் ஒரே நடிகரின் இரண்டு திரைப்படங்கள் தலா ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது என்றால், அது ஷாருக்கானின் படங்கள் தான். ஷாருக்கானை 'தில் ஆஷ்னா ஹை' திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார் நடிகை ஹேமமாலினி. அன்று தொடங்கிய ஷாருக்கானின் திரைப்பயணம் 32 ஆண்டுகளாகியும் இன்றுவரை அவரை முன்னிலையில் வைத்துள்ளது. 90 களில் பெரும்பாலான படங்களில் ரொமாண்டிக் ஹீரோவாக வலம் வந்த அவரை ரசிகைகள் தங்களது காதலனாகவே கொண்டாடினார்கள். தனக்குத் தெரிந்ததை திரைமொழியாக்கி வசூலில் சாதனை படைப்பதில், அதிக கவனம் செலுத்திய ஷாருக்கான் பாலிவுட்டின் தவிர்க்க முடியாக ஹீரோவாக மாறினார்.

பாலிவுட்டின் கிங்கானுக்கு பிறந்தநாள்... திரைப்பிரபலங்கள் வாழ்த்து...

ஷாருக்கான் நடிப்பில் நடப்பு ஆண்டில் வெளியான பதான் மற்றும் ஜவான் ஆகிய இரு திரைப்படங்களும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. அவரது நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்டம் டன்க்கி. இந்நிலையில், 58-வது பிறந்தநாள் கொண்டாடும் ஷாருக்கானுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Share this story