கருப்பு - வெள்ளையில் வெளியாகும் பிரம்மயுகம்

கருப்பு - வெள்ளையில் வெளியாகும் பிரம்மயுகம்

மம்முட்டி தற்போது பிரம்மயுகம் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனை ராகுல் சதாசிவன் இயக்குகிறார். இப்படத்தில், மம்முட்டியுடன் இணைந்து சித்தார்த் பரதா, அர்ஜுன் அசோகன், அமல்டா லீஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். நைட் சிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. கிறிஸ்டோ சேவியர் இதற்கு இசை அமைக்கிறார். ஹாரர் திரில்லர் கதை களத்தில் இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பாக பூஜையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து டைட்டில் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டனர். 

கருப்பு - வெள்ளையில் வெளியாகும் பிரம்மயுகம்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வருகிறது. பான் இந்தியா அளவில் படம் வெளியாகிறது. இந்நிலையில், இத்திரைப்படம் முழுக்க முழுக்க கருப்பு மற்றும் வெள்ளை வடிவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Share this story