சூறாவளி போல சுழற்றும் 'வால்டர் வீரய்யா'... சிரஞ்சீவி பட டிரெய்லர் வெளியீடு !

Walter veraiyya

சிரஞ்சீவியின் 'வால்டர் வீரய்யா' படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

'ஃகாட்பாதர்' படத்திற்கு பிறகு சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வால்டர் வீரய்யா'. இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரவி தேஜா‌ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.‌ பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பாபி சிம்ஹா, கேத்ரின் தெரசா, நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Walter veraiyya

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் ஆகியோரின் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். சங்கராந்தியை முன்னிட்டு இப்படம் வரும் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

Walter veraiyya

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லரில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. சிரஞ்சீவி ஆக்ஷனில் அடித்து நொறுக்குகிறார். மொத்ததில் இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story