எல்லா ஏரியாவும் நம்ம ஏரியாதான்... சிரஞ்சீவியின் ‘போலா சங்கர்‘ டீசர் வெளியீடு !

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள ‘போலா சங்கர்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தமிழில் அஜித் நடிப்பில் சூப்பர் ஹிட்டடித்த திரைப்படங்களில் ஒன்று ‘வேதாளம்’. இந்த படம் தற்போது தெலுங்கில் முன்னணி நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் ரீமேக்காகி வருகிறது. மெஹர் ரமேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை ஏகே எண்டர்டைமண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
அண்ணன் - தங்கை சென்டிமென்ட்டை மையமாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை தமன்னா கதாநாயகியாகவும், கீர்த்தி சுரேஷ் தங்கை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் பட்டையை கிளப்பும் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரில் நடிகர் சிரஞ்சீவி அடித்து நொறுக்குகிறார். இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.