முதன் முறையாக பஞ்சாரா மொழியில் பாடிய சித்ரா

முதன் முறையாக பஞ்சாரா மொழியில் பாடிய சித்ரா

ரசிகர்களால் சின்னக்குயில் என செல்லமாக அழைக்கப்படும் பின்னணி பாடகி சித்ரா, கடந்த 40 வருடங்களாக தனது இசை பயணத்தை தொடர்ந்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள பல மொழிகளிலும், மலாய், லத்தீன், அரபி, பிரெஞ்ச் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளிலும் அவர் பாடல்கள் பாடி இருக்கிறார். 

முதன் முறையாக பஞ்சாரா மொழியில் பாடிய சித்ரா

இந்நிலையில் முதன்முறையாக பஞ்சாரா மொழியில் சித்ரா ஒரு பாடலை பாடியுள்ளார். பஞ்சாராவில் பாரம்பரிய உடையை அணிந்து வந்து இந்த பாடலை பாடி இருக்கிறார். ஆம்தர் நிவாஸ் என்கிற படத்திற்காக தான் இந்த பாடலை பாடியுள்ளார். விநாயக் பவார் என்பவர் எழுதியுள்ள இந்த பாடலுக்கு எம்.எல்.
ராஜா இசையமைத்துள்ளார். 

முதன் முறையாக பஞ்சாரா மொழியில் பாடிய சித்ரா

இது குறித்த புகைப்படம் ஒன்றை சித்ரா, தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Share this story