‘சிட்டாடல்’ வெப்தொடரின் படப்பிடிப்பை நிறைவு செய்த ‘சமந்தா’.

photo

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம்வரும் சமந்தா திரைப்படம், வெப்தொடர் என் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் புது வெப்தொடரில் நடித்து முடித்துள்ளார். சிட்டாடல் ஒரு ஆங்கில வெப்தொடர், இதில் ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் ரிச்சர்ட் மேடன் இணைந்து நடித்திருந்தனர். இதன் இந்திய வெர்ஷனில் சமந்தா மற்றும் வருண் தவான் நடிக்கின்றனர். விறுவிறுப்பாக நடந்த இந்த வெப்தொடரின் படப்பிடிப்பு நிறைவுபெற்றதாக நடிகை சமந்தா தனது  சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

photo

சிட்டாடல் வெப் தொடரை,’ தி ஃபேமிலி மேன்’ வெப் தொடர் மூலமாக பிரபலமான ராஜ் நிடமொரு மற்றும் கிருஷ்ணா டிகே இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா மட்டுமின்றி, செர்பியாவில் நடந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து முடிந்து தொடர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

photo

ஏற்கனவே சமந்தா நடித்த குஷி திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், அடுத்ததாக சமந்தா எந்த ஒரு படத்திலும் கமிட்டாகவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. காரணம் அவர் தசை அழற்சி நோய்க்காக சிகிச்சை எடுக்க வெளிநாடு செல்ல உள்ளாராம்.

Share this story