டி எஸ் பி மீது சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்த பிரபல நடிகை….

photos

பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மீது காவல் துறையில் வழக்கு.

photos

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களுக்கு இசையமைப்பது, பாடல்கள் பாடுவது என முன்னனி இசையமைப்பாளரான டி எஸ் பி என்கிற தேவி ஸ்ரீ பிரசாத், தற்பொழுது சொந்தமாக பாடல்கள் எழுதி பாடி, இசையமைத்து யூடியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலும் பதிவிட்டும் வருகிறார்.

photos

இந்த நிலையில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் சமீபத்தில் ' பரி' என்ற பாடலை பாடி, இசையமைத்து  அந்த பாடலை யூடியூபில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த பாடல் இந்தியாவின் பல மொழிகளில் வெளியாகியுள்ளது. அந்த பாடலை  2 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த பாடலில் பெண்கள் பிகினி உடையில் 'ராமா ஹரே ராமா... கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே...' என பாடும் போது ஆடுவதாகவும் இதனால் தங்களின் மத உணர்வை இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் புண்படுத்தி விட்டதாகவும் கூறி நடிகை கராத்தே கல்யாணி ஐதராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஆதரமாகக் கொண்டு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this story