'கஸ்டடி'-யில் கீர்த்தி ஷெட்டியின் கேரக்டர் என்ன ?... புதிய அப்டேட்

custody

'கஸ்டடி' படத்தில் கீர்த்தி ஷெட்டியின் கதாபாத்திரம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் 'கஸ்டடி'. தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாகசைதன்யா இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். முன்னணி இயக்குனர் வெங்கட் பிரபு இப்படத்தை இயக்கி வருகிறார். 
 custody

மேலும் இந்த படத்தில் அரவிந்த் சாமி, பிரேம்ஜி, சரத்குமார், ராம்கி வெண்ணிலா கிஷோர், பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்து வருகின்றனர். சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வருகிறது.

இந்தப் படம் வரும் மே மாதம் 12-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தயாரிப்பு பணியில் உள்ள இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டியின் கேரக்டர் குறித்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் ரேவதி என்ற கதாபாத்திரத்தில் கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story