தூம் பட இயக்குநர் காலமானார்... திரைப்பிரபலங்கள் இரங்கல்....

தூம் பட இயக்குநர் காலமானார்... திரைப்பிரபலங்கள் இரங்கல்....

பாலிவுட் திரையுலகில் கடந்த 2004ல் வெளியாகி தூம் படத்தின் மூலம் உலகெங்கும் இருக்கும் சினிமா ரசிகர்கள் இடையே தனக்கென தனி இடத்தை பிடித்தவர் இயக்குநர் சஞ்சய் காத்வி. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற தூம் திரைப்படத்தில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திருந்தனர். அதேபோல் 2006ம் ஆண்டு சஞ்சய் காத்வி இயக்கத்தில் வெளியான தூம் இரண்டாம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது .

தூம் பட இயக்குநர் காலமானார்... திரைப்பிரபலங்கள் இரங்கல்....

இந்நிலையில் இயக்குநர் சஞ்சய் காத்வி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். 56 வயதாகும் அவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் . மூன்று தினங்களில் சஞ்சய் காத்வி தனது 57வது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில் மாரடைப்பால் இறந்து உள்ளது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. 

தூம் பட இயக்குநர் காலமானார்... திரைப்பிரபலங்கள் இரங்கல்....

திரையுலகில் தனக்கென தனி பெயர் மற்றும் புகழையும் சம்பாதித்த இயக்குநர் சஞ்சய் காத்வியின் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

Share this story