நாகசைதன்யாவின் ‘தூதா’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.

photo

நாக சைதன்யா பத்திரிக்கையாளராக நடித்துள்ள ‘தூதா’ வெப்தொடரின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

photo

நர்த்ஸ்டார் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் விக்ரம் குமார் இயக்கத்தில் தெலுங்கில் தயாரான வெப்தொடர் ‘தூதா’. இந்த தொடரில் பிரியா பவானி ஷங்கர்,பார்வதி ஆகியோர் நடித்துள்ளனர். சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை களத்தில் உருவான இந்த தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வரும் டிசம்பர் 1ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதற்கு முன்னர் விக்ரம் குமார், நாக சைதன்யா கூட்டணியில் ‘தேங்க்யூ’ படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் இந்த வெப் தொடர் வெற்றியடைய வேண்டும் என்பதே ரசிகளின் கருத்தாக உள்ளது.  


 

Share this story