மலையாளத்தில் கால்தடம் பதிக்கும் ஐஸ்வர்யா ராய்... யாருடைய படத்தில் தெரியுமா ?

d148

முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய், முதல்முறையாக மலையாள படத்தில் நடிக்கவுள்ளார். 

இந்திய சினிமா ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராய். முன்னாள் உலக அழகியான அவர், பாலிவுட் பிசியான நடிகையாக இருக்கிறார். இந்தியை தவிர தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 

d148

ஆனால் இதுவரை மலையாளத்தில் ஒரு படம் கூட நடித்தத்தில்லை. இந்நிலையில் முதல்முறையாக மலையாள திரைப்படம் ஒன்றில் நடிக்க ஐஸ்வர்யா ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் பிரபல மலையாள நடிகரான திலீப் கதாநாயகனதாக நடிக்கிறார். இந்த படத்தில் ப்ரனித்தா சுபாஷ், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரதேஷ் ரகுநந்தன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை ஆர்பி செளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.  

d148

திலீப்பின் 148வது படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இன்னும் ஹீரோயின் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட வில்லையென்றாலும் ஐஸ்வர்யா ராய் தான் கதாநாயகி என்று தகவல்கள் கசிந்துள்ளது. இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

Share this story