தலைவரை சந்தித்து ஆசி பெற்ற ‘2018’ பட இயக்குநர் ஜூட்.

photo

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது 170வது படத்தின் ஷூட்டிங்கிற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரம் சென்றுள்ள நிலையில், அங்கு 2018 பட இயக்குநரான ஜூட் ஆண்டனி தலைவரை சந்தித்து ஆசிபெற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

photo

‘ஓம் சாந்தி ஓஷானா’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் ஜூட் ஆண்டனி, இவர் இயக்குநர் மட்டுமல்லாது மிகச்சிறந்த நடிகருமாவார். இந்த நிலையில் இந்த ஆண்டு ஜூட் இயக்கத்தில் 2018 திரைப்படம் வெளியானது. இந்தப்படம் கேரள மாநிலத்தில் 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது மக்கள் எப்படியெல்லாம் அவதிப்பட்டனர் என்பதை அப்படியே வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக அமைந்திருந்தது. அதனாலேயே படம் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி கிளப்பில் இணைந்தது. தொடர்ந்து படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. அதுமட்டுமலாமல் படம் 2023 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

photo

இந்த நிலையில் படத்தின் இயக்குநரான ஜூட் , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இது குறித்து கூறிய அவர் “ போய் ஆஸ்கர் வாங்கிட்டு வா….எனது ஆசிகள், பிராத்தனைகள்” என சூப்பர் ஸ்டார் வாழ்த்திய தருணம் எனது வாழ்வில் மறக்க முடியாது என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் ஜூட்.

  

Share this story