திரையுலக ஜான்பவான் கே விஸ்வநாத் மறைவு.. பிரதமர், திரைப்பிரபலங்கள் இரங்கல் !

K Viswanath

மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத்தின் மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

தென்னிந்தியாவில் மூத்த இயக்குனராக இருந்த கே.விஸ்வநாத் நேற்றிரவு உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார். 93 வயதாகும் அவர், ஆந்திராவை சேர்ந்தவர். தற்போது ஐதராபாத்தில் உள்ள அவருக்கு உடலுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இயக்குனர் கே.விஸ்வநாத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் இயக்குனர் கே விஸ்வநாத் மறைவால் வருந்துகிறேன். சினிமா உலகின் ஜான்பவனாக இருந்தார். பன்முக திறமைக்கொண்ட அவர் ஒரு சிறந்த படைப்பாளி. சினிமாவில் அவர் செய்த புரட்சி, சினிமா ஆர்வலர்களை கவர்ந்து வைத்துள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

நடிகர் சிரஞ்சீவி விடுத்துள்ள இரங்கல் பதிவில், தெலுங்கு மற்றும் இந்திய சினிமாவில் ஈடு செய்ய முடியாத இழப்பு. எனக்கு அவர் மறைவு தனிப்பட்ட பேரிழப்பு. காலத்தை வெல்லும் படைப்புகளை வழங்கிய அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும் என்று கூறியுள்ளார். 


நடிகர் மம்மூட்டி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், கே விஸ்வநாத் காரு மறைவு வருத்தத்தை அளிக்கிறது. அவரது இயக்கத்தில் நடித்த பெருமை எனக்கு இருக்கிறது. அவரது பிரிவால் வாடும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். 


நடிகர் மோகன்லால் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கே விஸ்வநாத் மறைவு செய்தி இதயத்தை நொறுக்கிவிட்டது. அவரது மறைவால் வாடுபவர்களுக்கு போதிய வலிமை கொடுக்கப்படி இறைவனை பிரார்த்திக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 


கே.விஸ்வநாத் மறைவுக்கு முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு, இயக்குனர் ராஜமௌலி, பவன் கல்யாண், மகேஷ் பாபு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார். 

 

Share this story