இயக்குனர் பிரசாந்த் நீல் பிறந்தநாள்... ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட 'சலார்' படக்குழு !

salaar

இயக்குனர் பிரசாந்த் நீல் பிறந்தநாளையொட்டி ஸ்பெஷல் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. 

தென்னிந்தியாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் பிரசாந்த் நீல். 'கேஜிஎப்' படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். அதன்பிறகு அவர் இயக்கிய 'கேஜிஎப்' படத்தின் இரண்டாம் பாகமும் சூப்பர் ஹிட்டடிக்க பல மொழிகளில் ஹீரோக்கள் விரும்பும் இயக்குனராக மாறியிருக்கிறார். 

salaar

தற்போது பான் இந்தியா ஸ்டார் பிரபாஸை வைத்து 'சலார்' படத்தை இயக்கி வருகிறார். வரிசையாக பிரபாஸுக்கு திரைப்படங்கள் தோல்வியை தழுவி வரும் நிலையில் 'சலார்' படத்தையே பெரிதும் நம்பியுள்ளார். கேஜிஎப் படத்தின் பாணியிலேயே உருவாகும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் பிரசாந்த் நீல் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறார். 

salaar

இந்நிலையில் இயக்குனர் பிரசாந்த் நீல் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி 'சலார்' படக்குழு சார்பில் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லும் விதமாக ஸ்பெஷல் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் 'சலார்' படத்திற்காக பிரசாந்த் நீல் கடுமையாக உழைத்து வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. 

 

Share this story