தெலுங்கை தொடர்ந்து கன்னடத்தில் படம்.. வெங்கட் பிரபுவின் அடுத்த ஹீரோ இவர்தான் !

venkat prabhu

இயக்குனர் வெங்கட் பிரபுவின் புதிய படம் குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் இயக்குனர் இருக்கும் வெங்கட் பிரபு, ‘சென்னை - 28’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதன்பிறகு சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, மாநாடு, மன்மத லீலை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இதில் அஜித்தை வைத்து இயக்கிய ‘மங்காத்தா’ திரைப்படம் பெஸ்ட் படமாக கருதப்படுகிறது.

venkat prabhu

தற்போது தெலுங்கில் நாக சைதன்யாவை வைத்து ‘கஸ்டடி’ படத்தை இயக்கி வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்த படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு தெலுங்கில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

kiccha sudeep

இந்த படத்தை முடித்து கன்னடத்தில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதில் பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்கான பணிகளையும் வெங்கட் பிரபு தொடங்கியுள்ளார். இதற்கிடையே சுதீப்பின் ‘விக்ராந்த் ரோணா’ படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விரைவில் ‘கப்ஜா’ திரைப்படம் வெளியாகவுள்ளது. அதனால் விரைவில் வெங்கட் பிரபுவுடன் கிச்சா சுதீப் இணைவார் என்று கூறப்படுகிறது. 

Share this story