மும்பை விமான நிலையத்தில் திஷா பதானியை திணற விட்ட காவலர்

பிரபல இந்தி நடிகை திஷா பதானி. புரி ஜெகநாத் இயக்கிய லோஃபர் என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், இப்போது இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்தியில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இவர் நடித்து வருகிறார். தமிழில் தற்போது இவர் சூர்யா நடிக்கும் கங்குவா படத்தில் நாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தை சிவா இயக்கி வருகிறார். அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ் நடிக்கும் ‘கல்கி 2829 ஏடி’படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
"ஐடி ப்ரூஃப் காட்டுங்க.." மும்பை விமான நிலையத்தில் நடிகை திஷா பதானியை திணற வைத்த CISF Officer.. #mumbaiairport | #DishaPatani | #IDProof | #surya42 | #Kanguva pic.twitter.com/m5X8fzpWln
— VOT 24x7 (@VOT24x7) October 13, 2023
இந்நிலையில், மும்பை விமான நிலையம் சென்ற திஷா பதானியை, அங்கிருந்த காவலர் ஒருவர் திக்குமுக்காடச் செய்துள்ளார். அவரிடம் காவலர் அடையாள அட்டை காட்டச் சொன்னார். ஆனால், அதை கையில் வைத்திராத திஷா, தனது கைப்பையை எடுத்து வரச்சொல்லி, வெகு நேரம் தேடி, இறுதியில் அதனை கண்டுபிடித்து காவலரிடம் காட்டினார். அதன்பிறகே, அவர் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்.