நானியை இயக்கும் டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி

நானியை இயக்கும் டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி

சிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி அடுத்தாக, நானியை வைத்து புதிய திரைப்படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஷியாம் சிங்கா ராய், தசரா ஆகிய படங்களை தொடர்ந்து ஹாய் நானா என்ற படத்தில் நானி நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடிக்கிறார். இதையடுத்து, தமிழ் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தியுடன் அவர் புதிய படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிபி சக்கரவர்த்தி. 

நானியை இயக்கும் டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி

இப்படத்திற்கு பிரபல இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதுவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this story