மிரட்டலான கேங்ஸ்டராக நடித்துள்ள துல்கர் சல்மான்... ‘கிங் ஆஃப் கோதா’ டீசர் வெளியீடு !

King of Kotha

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. .

பல மொழிகளில் பிசியாக நடித்து வருபவர் நடிகர் துல்கர் சல்மான். தற்போது அவர் நடித்துள்ள மிரட்டலான திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’. இந்த படத்தை அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார். இந்த படத்தில் துல்கருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லஷ்மி நடித்துள்ளார்.  இவர்களுடன் செம்பன் வினோத் ஜோஸ், ‘சார்பட்டா பரம்பரை’ புகழ் ஷபீர், பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

King of Kotha

 ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைத்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க தமிழகத்தில் உள்ள காரைக்குடி பகுதியில் நடைபெற்றுள்ளது. இந்த படம்  தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது. 

King of Kotha

இப்படம் ஓணம் பண்டிகையையொட்டி வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மிரட்டலான தோற்றத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெறிக்கவிடும் காட்சிகளால் படத்திற்கான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

Share this story