கலாட்டா செய்ய வரும் துல்கர் சல்மான்.. ‘கிப் ஆஃப் கோதா’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

KOKFirstSingle

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’. இந்த படத்தில் துல்கருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லஷ்மி நடித்துள்ளார்.  இவர்களுடன் செம்பன் வினோத் ஜோஸ், ‘சார்பட்டா பரம்பரை’ புகழ் ஷபீர், பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைத்து வருகின்றனர். இந்த படம்  தமிழ், தெலுங்கு, இந்தி என 4 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது.

KOKFirstSingle

முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மிரட்டலான தோற்றத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார்.  இப்படம் ஓணம் பண்டிகையையொட்டி வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.  தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் வரும் ஜூலை 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் ‘கலாட்டாக்காரன்’ என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story