தனுஷ் இயக்குனருடன் கூட்டணி அமைத்த துல்கர்... பிரபல நிறுவனம் தயாரிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

DulquerSalman

‘வாத்தி’ இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தெலுங்கில் பிரபல இயக்குனராக இருப்பவர் வெங்கி அட்லூரி. சினேகா கீதம், மிஸ்டர் மஞ்சு, ராங் டி, தோழி பிரேமா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர். சமீபத்தில் வெளியான தனுஷின் ‘வாத்தி’ படத்தையும் வெங்கி அட்லூரி தான் இயக்கினார். 

DulquerSalman

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. தற்போது இதே நிறுவனம் பிரபல மலையாள நடிகரான துல்கர் சல்மானை வைத்து புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது. இது துல்கர் நடிக்கும் மூன்றாவது நேரடி தெலுங்கு படமாகும். 

இந்த படத்தை வெங்கி அட்லூரி தான் இயக்கவுள்ளார். வரும் அக்டோபர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட பணிகள் நடைபெறும் இந்த படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 

Share this story