டிரெண்டிங்கில் முதலிடம் வகிக்கும் டன்கி ட்ரைலர்
1701949326595
ஜவான் படத்தை தொடர்ந்து ஷாருக்கான் நடித்துள்ள படம் ‘டன்கி’. இந்த படத்தில் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியுடன் கைகோர்த்துள்ளார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக டாப்சி நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து சதீஷ் ஷா, விக்கி கௌஷல், தியா மிர்சா ஆகியோர் முக்கிய வேடங்கலில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. படம் இம்மாதம் 21ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
ட்ரைலர் வெளியான 24 மணி நேரத்தில் 10 கோடி பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்தது. அதுமட்டுமன்றி ட்ரைலர் வெளியாகி இரண்டு நாட்கள் ஆன போதிலும், தொடர்ந்து டிரெண்டிங்கில் உள்ளது.