போதைப் பொருள் விவகாரம்: தகவல்கள் அழிப்பு! நடிகர் நவ்தீப்பிடம் தீவிர விசாரணை.

photo

தெலுங்கு சினிமாவில் போதைப்பொருள் புழக்கத்தில் அதிகமாக இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில் பல நடிகர்கள், இயக்குநர்கள் சம்மந்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது இந்த நிலையில் நடிகர் நவ்தீப்பிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

photo

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் நவ்தீப்புக்கு தொடர்பு இருப்பதை அறிந்த அதிகாரிகள் அவரை விசாரனைக்கு அழைத்துள்ளனர். அப்போது அவரது செல்போனில் இருந்த முக்கிய தகவல்கள், பணபரிவர்த்தணை தொடர்பான தகவல்கள் அனைத்து அழிக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்த அதிகாரிகள். அதனை மீட்டெடுத்தனர் அதில், போதைக்கும்பலுக்கு பணம் அனுப்பியது தெரியவந்தது.

photo

இந்த நிலையில் நவ்தீப்பிடம், காலை 11மணியிலிருந்து இரவு 10 மணிவரை விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர் பல கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என தெரிகிறது. தொடர்ந்து மீண்டு விசாரணைக்கு அழைப்பதாக கூறி அவரை அனுப்பியுள்ளனர். இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் பகீர் கிளப்பியுள்ளது.

Share this story